அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது..

0
184

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.

திடீரென கைது

அவரது சர்ச்சை பேச்சுகளால் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிபர் தேர்தல் சமயத்தில் அவர்மீது ஆபாச பட நடிகை ஒருவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்துபோது அரச ஆவணங்கள் சிலவற்றை அவரது வீட்டில் எடுத்துச்சென்று பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ட்ரம்ப் மீது உள்ள 37 குற்றவியல் வழக்குகளில் 31 வழக்குகள் தேசிய பாதுகாப்பு தகவல்களை வேண்டுமென்றே பதுக்கிக் கொண்டது தொடர்பானவை.

குற்றவியல் குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது | Former Us President Donald Trump Arrest

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ட்ரம்ப் தான் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் ட்ரம்ப் மீது 7 குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

2024 அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படி நடப்பது சதிவேலை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.