நெதர்லாந்தின் அழகிய கடற்கரையில் அத்துமீறும் ஜோடிகள்; அரசு எடுத்த நடவடிக்கை

0
228

நெதர்லாந்து வீரே நகர் கடற்கரையில் ஜோடிகளின் அத்துமீறல் குறித்து அடுக்கடுக்காக புகார்கள் குவிந்த நிலையில், தற்போது கடற்கரையில் உடலுறவு கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதோடு கடற்கரைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வீரே நகர் கடற்கரையில் எப்போதுமே காதலர்களுக்கு பஞ்சமிருக்காது.

ஜோடிகளிடம் எச்சரிக்கை

அழகான கடற்கரையில் அத்துமீறும் ஜோடிகள்; அரசின் அதிரடி நடவடிக்கை | Couples Transgressing Beaches Netherlands

குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் மாலை வேளைகளில் திரும்பிய திசையெல்லாம் காதல் ஜோடிகளே கண்ணுக்கு தெரிவார்கள். தனிமையில் அமர்ந்து காதல் செய்யும் ஜோடிகள் மெய்மறந்து எல்லைமீறி அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதாக குற்றச்சாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களது குழந்தைகளுடன் இங்கு வரும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகிறார்கள். இந்த செயலை பார்க்கும் சிறுவர்கள், மாணவர்களின் மனதில் காதல் ஜோடிகள் நஞ்சை விதைக்கின்றனர்.

அழகான கடற்கரையில் அத்துமீறும் ஜோடிகள்; அரசின் அதிரடி நடவடிக்கை | Couples Transgressing Beaches Netherlands

இதுவரை பொது வெளியில் எல்லைமீறிய ஜோடிகளிடம் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வீரே நகர மேயர் ஃபிரடெரிக் ஷோவெனார் கூறுகையில், “இந்த குன்றுகள் உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவை. இதை நாம் பாதுகாக்க வேண்டும். இருப்பினும் விடுமுறைக்கு வருவோர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சன் பாத் பிரியர்கள் கவலை

அழகான கடற்கரையில் அத்துமீறும் ஜோடிகள்; அரசின் அதிரடி நடவடிக்கை | Couples Transgressing Beaches Netherlands

அதேநேரம் கடற்கரையில் நிர்வாணமாக சன் பாத் எடுக்கவரும் அனைவரும் இதுபோல அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதில்லையாம்.

பொதுவெளியில் உடலுறவு கொள்பவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் அவர்கள் நிர்வாணமாக சன் பாத் எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கின்றனர். அதனால் அரசாங்கத்தின் திடீர் உத்தரவால் சன் பாத் பிரியர்கள் கவலை கொண்டுள்ளார்களாம்.