தண்டவாளத்தில் உறங்கிய முதியவர்; கடும் வேகத்தில் வந்த புகையிரதம்; சாரதிக்கு குவியும் பாராட்டுக்கள்

0
70

புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கிங் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டால் உயிர் தப்பிய சம்பவமொன்று மன்னம்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (6) இரவு 8.40 மணியளவில் மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

கடும் போதை

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் மன்னம்பிட்டியவில் செல்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புகையிரதம் மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியால் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி சமயோசிதமாக புகையிரத வண்டியை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.

தொடர்ந்து கடும் போதையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட சுமார் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் புகையிரத வண்டியில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி புகையிரத நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் உடனடியாக செயல்பட்டு வயோதிபரின் உயிர் காத்த புகையிரத வண்டி சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.