இராணுவ வசமிருந்த காணி 32 வருடங்களுக்கு பின் கையளிப்பு!

0
105

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலக பிரிவில் 8.6 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிரான் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இராணுவத்திடம் வசமிருந்த காணி 32 வருடங்களுக்கு பின் கையளிப்பு! | The Land With The Army Over After 32 Years

மேலும் 59 உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் இன்று கையளிக்கப்பட்டது. இந்த காணிகளை 1991 ஆம் ஆண்டிலிருந்து இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.