தென் கொரியா – யெச்சியோனில் தற்போது நடைபெற்று வரும் 20 வது ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4x400m கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தருஷி கருணாரத்ன, ஜெய்ஷி உத்தரா, வினோத் ஆரியவன்ஷ மற்றும் ஷெஹான் தில்ரங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், போட்டியை நடத்தும் நாடான தென் கொரியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இலங்கை அணி 3:25.41 நிமிடங்களில் முதலிடத்தையும், தென் கொரியாவும் (3:28.30) இந்தியாவும் (3:30.13) அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.

20வது ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும், 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.