ஐபோனுக்கான வாட்ஸ்அப் Companion Mode இப்போது வெளிவந்துள்ளது.
META-வுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது Companion Mode-ஐ பயன்படுத்தி நான்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒரு கணக்கை இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது.
இப்போது, ஆப்பிள் ஐபோன் (iOS) பயனர்களுக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சத்தைப் பெற, ஐபோன் பயனர்கள் WhatsApp-ன் iOS 23.10.76 வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவேண்டும்.
Companion Mode இயக்கப்பட்டிருக்கும்போது இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களும் நேரடியாக Cloud-உடன் ஒத்திசைக்கப்படும். முதன்மை சாதனம் இணையத்துடன் இணைக்கப்படாதபோதும் துணை சாதனங்கள் அனைத்து டெக்ஸ்ட் மெஸ்ஸேஜ், மல்டிமீடியா மற்றும் வாய்ஸ் நோட்டுகளையும் பெறலாம்.
முதன்மை சாதனம் நீண்ட காலத்திற்கு இணைய அணுகலை இழந்தால், WhatsApp உங்களை மற்ற சாதனங்களிலிருந்து வெளியேற்றும் என கூறப்படுகிறது.
iOS சாதனங்களுக்கான சமீபத்திய WhatsApp புதுப்பிப்பு மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் ஜிஃப் ஆட்டோ பிளேபேக், வாட்ஸ்அப் அழைப்புகளை iOS காலெண்டருடன் இணைக்கும் திறன் மற்றும் மறைந்து போகும் மெசேஜ் அம்சத்தைப் பயன்படுத்தும் போது முக்கியமான செய்திகளைச் சேமிப்பதற்கான விருப்பம் ஆகியவை அடங்கும்.
பயனர்கள் தங்கள் ஐபோன்களில் சமீபத்திய WhatsApp அம்சங்களை அனுபவிக்க ஆப் ஸ்டோருக்குச் சென்று சமீபத்திய பதிப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.