ஆஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள பாடசாலை மற்றும் அங்குள்ள கார் பார்க்கிங்கில் குறித்த சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பத்தினால் பாடசாலை கட்டிடங்கள், கார்கள் சேதமடைந்தன.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் சார்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பொலிஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அவன் இந்த பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்தது.
எனவே சிறுவனை பொலிஸார் கைது செய்து அவனிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தொடர்பில் சிறுவனிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
