கொழும்பில் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி! வெடித்தது சர்ச்சை

0
281

படைவீரர்களின் சமாதியில் சிறுநீர் கழிப்பதற்கு நிகரான செயலை அரசாங்கம் மேற்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கொடிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு எடுத்த படைவீரர்களுடன், பயங்கரவாதிகளையும் நினைவுகூரும் வகையில் கொழும்பில் அமைக்கப்படும் நினைவுத்தூபி குறித்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.

செயற்பாட்டை உடன் நிறுத்த கோரிக்கை

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் இந்த இழிவான செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும். 

இந்த நினைவுத்தூபி அமைப்பதற்கு ஒட்டுமொத்த தேசமே எதிர்ப்பை வெளியிட வேண்டும். 

தமிழ் பிரிவினைவாதிகளுக்கு முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மண்டியிட்டு அவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.