அபுதாபியில் தீயில் கருகிய இலங்கைப் பெண்

0
49

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

 6 பேர் உயிரிழப்பு 

குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அரபு நாடொன்றில் தீயில் கருகிய இலங்கைப்பெண் | Sri Lankan Woman Burnt In Fire In Abu Dhabi

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த விடயத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேவெளை அபுதாபி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாடு தகவல்கள் ,கூறுகின்றன.