யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை இரகசியமாக திறந்து வைப்பு!

0
176

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று காலை 5.30 மணியளவில் தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்களுடன் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இரகசியமாக விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை இரகசியமாக திறந்து வைப்பு | Secretly Open The Jaffna Thaiitti Thissa Vihara
யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை இரகசியமாக திறந்து வைப்பு | Secretly Open The Jaffna Thaiitti Thissa Vihara