கோட்டாபயவின் தீர்மானத்தினால் நாட்டின் நெல் விளைச்சல் 50 % வீழ்ச்சி..

0
222

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எடுத்த தீர்மானம் காரணமாக நாட்டின் நெல் விளைச்சல் 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

ஆய்வில் வெளியான தகவல்

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி ஆய்வு நிறுவகத்தின் ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.  

கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இரசாயன உரப் பயன்பாட்டை திடீரென தடை செய்திருந்தார்.

இந்த தடையின் காரணமாக நாட்டில் பெரும்போக நெல் விளைச்சல் 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

விளைச்சல் வீழ்ச்சியால் ஏற்பட்ட தாக்கம்

விளைச்சலில் ஏற்பட்ட வீழ்ச்சி நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை முறை விவசாயத்தின் ஊடாக பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும் என 3 வீதமான விவசாயிகள் மட்டுமே நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கோட்டாபயவின் தீர்மானத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடி | Gotas Shift To Organic 50 Drop In Rice Yield

பூரணமான அடிப்படையில் இயற்கை முறையில் அல்லது இரசாயன உரப் பயன்பாட்டை முற்று முழுதாக தடை செய்து பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.