சமூக வலைதளங்களில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் மீது அவதூறு; கமிஷனர் எச்சரிக்கை

0
296

இந்தியாவின் இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மன்கில்லையும் அவரது சகோதரியையும் சமூக ஊடகங்களில் பலர் அவதூறு செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்திய பிரீமியர் லீக்கின் முக்கியமான போட்டியில் குஜராத் அணியின் துடுப்பாட்ட வீரர் சுப்மன்கில் அடித்த சதம் காரணமாக பெங்களுர் அணி பிளேஒவ்விலிருந்து வெளியேற்றப்பட்டது.

ஆணையாளர் கடும் எச்சரிக்கை 

அதன் பின்னரே சுப்மன்கில்லை இலக்குவைத்து சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றதாக புதுடில்லியின் மகளிர் விவகாரங்களிற்கான ஆணையாளர் கடும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவதூறு; எச்சரிக்கை விடுத்த ஆணையாளர் | Defamation On Social Media Submangill

சுப்மன்கில்லின் சகோதரியையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அவதூறுபிரச்சாரங்களின் ஸ்கீரீன்சொட்களை வெளியிட்டுள்ள மகளிர் விவகாரங்களிற்கான ஆணையாளர் சுவாதி மலிவால் சமூக ஊடகங்களில் செயற்பட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தங்களிற்கு பிடித்தமான அணி ஒருபோட்டியில் தோற்றதால் சுப்மன்கில்லை சமூக ஊடக பயனாளர்கள் அவதூறு செய்வது மிகவும் வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை விராட்கோலியின் மகளை இலக்குவைத்து சமூக ஊடகங்களில் செயற்பட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவதூறு; எச்சரிக்கை விடுத்த ஆணையாளர் | Defamation On Social Media Submangill

சுப்மன்கில்லின் அற்புதமான 104 ஓட்டங்கள் காரணமாக ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் குஜராத் அணி பெங்களுர் அணியை வெளியேற்றியது.

இந்த போட்டியின் பின்னரே கில்லின் சகோதரியின் இன்ஸ்கிராம் பதிவை அடிப்படையாக வைத்து சமூக ஊடக பதிவாளர்கள் அவரை இலக்குவைத்து அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.