பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டுபிடித்த கனடிய ஆய்வாளர்கள்

0
327

கனடிய ஆய்வாளாகுள் பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். எமது ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து சுமார் 90 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்த கோள் காணப்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோளில் பூமிக்கு நிகரான பல்வேறு அம்சங்கள் கொண்டிருப்பதாகவும் எரிமலைகள் கட்டமைப்புக்கள் தென்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கனடாவின் மொன்றியால் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு பொறுப்பாளர் பிஜேரான் பென்னக்கே உள்ளிட்ட ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டு பிடித்துள்ளனர்.

நாஸாவின் TESS என்னும் செய்மதியொன்றின் ஊடாக இந்த புதிய கோள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டு பிடித்த கனடிய ஆய்வாளர்கள் | Canadian Discover New Earth Like Planet