கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென போலி ரத்தத்தை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக விழாவின்போது உக்ரேனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து ரெட் கார்ப்பெட்டில் வந்த பெண் ஒருவர் திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை உடலில் ஊற்ற ஆரம்பித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில் காவலாளிகள் உடனடியாக அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.