யாழில் கொடுமை; மகள்களை வன்புணர்வு செய்த தந்தை!

0
51

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும் அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுமுறையில் வீட்டிற்கு சென்ற சிறுமிகளுக்கு கொடுமை

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களது தந்தையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

யாழில் கொடுமை; மகள்களை துர்நடத்தைக்குள் தள்ளிய தந்தை | Father Who Pushed His Daughters Child Abuse

பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாடசாலையில் தங்கி கற்று வரும் நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமிகளின் தாய் கூலி வேலைக்குச் செல்பவர் என்றும் அவர் காலையில் சென்றால் இரவே வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.