இலங்கை தமிழ் அரசுக் கட்சி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏறாவூர்ப் பற்று பிரதேசக் கிளையைப் புரைமைப்பதற்கான கூட்டம் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் 20/05/2023 மு.ப 10:30 மணியளவில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசசிங்கம், அரியநேத்திரன், ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 16 வட்டாரங்களுக்குரிய 80 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என்று 10 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் தெரிவின் போது 4 பெயர்கள் முன்மொழியப்பட்டன. அதில் இருவர் தமது பெயர்களை வாபஸ் பெற்றனர். துரைராசசிங்கம், முரளிதரன் ஆகியோர் வாபஸ் பெற்ற நிலையில் நிலக்சன், சர்வானந்தன் ஆகியோர் தலைவர் தெரிவுக்கான போட்டியாளர்களாக இருந்தனர்.
பின்னர் ஒரு ஆலோசனை முன்வைக்கப் பட்டது நிலக்சன், சர்வானந்தன் ஆகியோர் மூத்தவர்களிற்கு வழிவிட்ட விலகிக் கொள்வது சிறந்தது எனக் கூறப்பட்ட போது அவர்களும் அதனை ஏற்று விலகினர், உடன் தலைவர் பதவிக்கு துரைராஜசிங்கம் என அங்கத்தவர்கள் கதைக்க ஆரம்பித்தனர்.
தொகுதி மக்களைச் சந்திக்காத ஒருவர், எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒருவர், அவசர தேவைகளுக்கு வீட்டுக்குச் சென்றால் கதவை பூட்டும் ஒருவர், தொலைபோசியில் தொடர்பு கொள்ள முடியாத ஒருவரைத் தலைவராக தெரிவு செய்தால் தான் கட்சியை விட்டு விலகுவதாக கடும் எதிர்ப்பு வெளியிட விலகுவதற்கு மனம் இல்லாமல் துரைராஜசிங்கம் ஒதுங்கிவிட்டார்.

தலைவர் தெரிவு
இதன் போது வாக்களிப்பு மூலமாக தலைவர் தெரிவு இடம் பெற்றது. இதில் மூன்று வாக்குகளை மேலதிகமாகப் பெற்று நிலக்சன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும்,செயலாளராக இருவர் பெயர்கள் முன்மொழியப்பட்டது. அதில் சண்முகலிங்கம் வாபஸ் பெற்றதனால், உதயவேந்தன் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை பொருளாளராக யுதிஸ் உபதலைவராக துரைராசசிங்கம், உபசெயலாளராக ஜெயானந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இப்பிரதேசக் கிளையில் மாத்திரமே வாக்குப் பதிவுகள் மூலமாக தலைவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இராஜினாமா செய்த இரா.துரைராசசிங்கம்
தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்து பதவியை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்ற காரணத்தால் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தவர் இரா.துரைராசசிங்கம்.
கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றம் செல்லக் கூடாது என்பதற்காக சம்பந்தன் வீட்டில் தேசியப்பட்டியல் கலையரசனின் பெயரை முன் மொழிந்தது இதற்குக் காரணம்.
கட்சிக்கு தொரியாமல் முடிவு எடுத்ததால், கட்சி நடவடிக்கைக்கு பயந்து ஒதுங்கினார் துரைராஜசிங்கம்.
துரைராஜசிங்கம் வீட்டிற்கு வெளியேயும் சரி, வீட்டிற்கு உள்ளேயும் சரி சுயமாக சிந்திப்பவர் அல்ல, சனாதிபதி சட்டத்தரணியின் ஆலோசணைக்கு அமைய தற்போது முதலில் இருந்து வட்டாரக் கிளை, தொகுதிக் கிளை என தனது அரசியல் நகர்வை ஆரம்பித்துள்ளார் துரைராஜசிங்கம்.

விரைவில் தலைவராக முடிவு
விரைவில் நடைபெற உள்ள கல்குடா தொகுதிக் கிளையில் தலைவராக தெரிவாவதே அவரை வழிநடத்தும் சனாதிபதி சட்டத்தரணியின் இலக்கு, அதன் பின்னர், மாவட்டக்கிளையில் தலைவராக சாணக்கியன் செயலாளராக துரைராஜசிங்கம் என்பதே இப்போது வகுக்கப்பட்டுள்ள இரகசியத் திட்டம்.
கல்குடா தாகுதியில் மிகப் பலம் பெருந்திய நிலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனை வீழ்த்துவதில் சனாதிபதி சட்டத்தரணியின் ஒரு குழு மிகத் தீவிரமாக செயற்படுகின்றது.
மயிரிழையில் தப்பிய அரியநேத்திரன்
பட்டிருப்புத் தொகுதியில் பலம் பொருந்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன, அதன் வெளிப்பாடு பட்டிருப்புத் தொகுதிக் கிளையில் மயிரிழையில் ஒரு பதவி அரியநேத்திரனிற்குக் கிடைத்தது.
மட்டக்களப்பின் பல போராட்டங்களில் தமிழரசின் முகமாக பலராலும் அறியப்பட்ட மிகப் பலம் பெருந்திய தமிழரசுக் கட்சியின் அடையளம் ஓரங்கட்டப்படும் நிலை ஆரம்பமாகியுள்ளது.
அரியநேத்திரன் – யோகேஸ்வரனை நீக்குவதில் தீவிரம்
அரியநேத்திரன் – யோகேஸ்வரன் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பற்றாளர்கள் மட்டுமல்ல, கட்சி விடும் தவறுகளுக்கு எதிராகவும் வினா எழுப்பும் அதி தீவிர தமிழ் தேசிய பற்றாளர்கள்.

இவர்களை கட்சியில் ஓரம் கட்டுவதில் முன்னாள் பொதுச் செயலாளர் செய்ய வேண்டிய வேலைகள் அத்தனையையும் மிக கட்சிதமாக செயற்படுத்தியுள்ளார்.
மீண்டும் பதவிக்கு துரைராசசிங்கம்
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்த துரைராசசிங்கம் மீண்டும் மூலக் கிளை, வட்டாரக் கிளை, தொகுதிக் கிளை என பதவிக்கு அலைவது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் அருவருப்பாக பார்க்கப் படுகிறது.
தமிழ் தேசய அரசியலில் பதவியை இராஜினாமா செய்த ஒருவர் மீண்டும் பதவிக்கு அலையும் ஒரு சந்தர்ப்பம் இது எனக் கூறப்படுகிறது.
பொது நாகரீகம் கருதி இராஜினாமா செய்தவர்கள், பண்பாக நடந்து கொள்ள வேண்டும், பதவிக்கு அலைபவர்களுக்கு பண்புகள் எல்லாம் எதுவும் இருக்குமா என மக்கள் வினா எழுப்புகின்றனர்.

2020 நாடாளுமன்றத் தேர்தல்
கடமைக்காக தேர்தலில் போட்டியிட்ட துரைராஜசிங்கம் மாவட்டத்தில் போட்டியிட்ட எட்டு வேட்பாளர்களில் எட்டாவதாக தேர்தலில் தெரிவானார், வீட்டில் சத்தமாக கதைப்பதற்கு கூட அச்சப்படும் துயர நிலை, 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனது வீட்டின் பிரதான வாயில் கதவை மதிலால் ஏறி முன்பக்கம் சங்கிலிகளால் கதவை பலமாக பூட்டி விட்டு மீண்டும் மதிலால் ஏறி வீட்டிற்குள் சென்றவர்.
பின்னர் ஊடகங்களிடம் பிள்ளையான கதவை வெளியால் பூட்டி விட்டார் என ஊடகங்களுக்கு அறிவித்து அனுதாபம் தேடியவர், இதன் உண்மைச் சம்பவம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிற்கு நன்கு தெரியும்.


