திருமண நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்த மக்கள்; பரபரப்பு!

0
244

திருமண நிகழ்ச்சியில் உணவு உண்டவர்கள் திடீரென மயங்கி விழுந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மாரஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் எடப்பால் அருகே காலடி பகுதியை சார்ந்த இளைஞனுக்கும் துருவாணம் பகுதியில் இன்றைய தினம் திருமணம் இடம்பெற்றுள்ளது.

திருமண வைபவத்தில் மணமக்களை வாழ்த்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

60 பேர் மருத்துவமனையில் 

இந்நிலையில் திருமணத்தின் போது இதில் அளிக்கப்பட்ட விருந்தில் உணவருந்திய சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கமும், தொடர்ந்து உணவருந்திய பலருக்கும் உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அங்கு வழங்கப்பட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு வகைகளிலிருந்து மாதிரி சேமித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.