சாக்லேட்டு பதிலாக பூச்சிகளை சாப்பிடச் சொல்லும் நாடு!

0
192

நாட்டிலுள்ள பிள்ளைகள் சாக்லேட், சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக பூச்சிகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் சாப்பிடச் சொல்வதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

எதிர்காலத்தில் சுவிஸ் மற்றும் சில நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையே இந்த தகவல் அம்பலமாகியுள்ளது.

கடந்த ஆண்டு, (2022) மே மாதம், ஜேர்மனியும், ஐக்கிய நாடுகளும், உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர்பில் பெரிய எச்சரிக்கை விடுத்த போதிலும் அதை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை.

இருப்பினும், 2022 ஓகஸ்ட் மாதமளவில் பணக்கார நாடுகளிலேயே மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க பயன்படுத்த கூடியதாகவுள்ள திகதி தாண்டிய உணவை முகந்து பார்த்து, அவை நன்றாக இருந்தால் பயன்படுத்துவதே சிறந்த வழி என தீர்மானிக்கும் நிலை உருவாகியிருந்தது.

பிள்ளைகளை சாக்லேட்டு பதிலாக பூச்சிகளை சாப்பிடச் சொல்லும் முக்கிய பணக்கார நாடு! | Swiss Make Children Eat Insects Instead Chocolate

இந்த நிலையிலே, உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக சுவிஸில் அரசியல்வாதிகள் பிள்ளைகளிற்கு பூச்சிகளை உண்ணப்பழக்குகிறார்கள்.

இருப்பினும், எதிர்காலத்தில் அவை மட்டுமே கிடைக்கும் முக்கிய உணவாக மாறிவிடும் என கருதுகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், உண்ணக்கூடிய பூச்சிகளுக்கான உலகளாவிய சந்தை 2023 ஆம் ஆண்டுக்குள் $1.18 பில்லியனாக உயரும்” என்றும் ஆராய்ச்சி ஒன்றில் கணித்துள்ளது.