இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும், ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை குற்றப்பரம்பரையாக்கி, மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருமான அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்கள்
மோட்டார் போக்குவரத்துத் துறையில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் 60 இலட்சம் வாகனங்கள் மாத்திரமே QR குறியீடு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேலாக வருமான அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்கள் மாவட்ட வாகன பரிசோதகர்கள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு தகவல் அமைப்பிலிருந்து நீக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.