காய்கறிகளில் கத்தரிக்காய் என்பது மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடியதும் சமைத்தால் நல்ல சுவையை அள்ளித்தரும் ஒன்றாகவும் காணப்படுகின்றது.
இதில் எண்ணெய் கத்தரிக்காய் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 1/4 கிலோ
சீரகம் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
நல்லெண்ணெய் – 150 மில்லி
வறுத்தெடுக்க
காய்ந்த மிளகாய் – 15
வெந்தயம் – 1/2 கரண்டி
கடுகு – 1 கரண்டி
தனியா – 1/4 கப்
வேர்க்கடலை – 4 கரண்டி
மிளகு – 1/4 கரண்டி
சீரகம் – 1 கரண்டி
எள் – 2 கரண்டி
வறுத்தவற்றுடன் சேர்த்து அரைப்பதற்கு…
தோலுடன் வெள்ளைப் பூண்டு – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரித்து வைக்கவும்.
பின்னர் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து அரைக்கவும். அதற்கடுத்ததாக, கத்தரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலா கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
அதன் பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் சற்று வதங்கியதன் பின்னர் ஸ்டஃப் செய்த கத்தரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதற்கு தேவையான தண்ணீர் சேர்த்து அளவான தீயில் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கிவிடவும்.