அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் செயல்திறன் ஆய்வு; ஜனாதிபதி அலுவலகம் தயார்

0
164

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் செயல்திறனின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து காலாண்டுக்கு ஒருமுறை மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி அலுவலகம் தாயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு மதிப்பெண் அட்டை முறையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த ஜனாதிபதி அலுவலகம் தயாராகி வருகிறது.

இந்த மறுஆய்வுத் திட்டத்தின் கீழ், நிகழ்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செயலாளர்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் செயல்திறன் ஆய்வு : ஜனாதிபதி அலுவலகம் | Performance Review Ministries Ministry Secretaries

ஜனாதிபதி செயலகம் 

பொதுமக்களின் நலனுக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் நெருக்கமாக கண்காணிக்கப்படும்.

அத்துடன் இடமாற்றம் தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன் செயலர்கள் செயலாற்றத் தவறிய பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 65 க்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் அதே அமைச்சகத்தில் தக்க வைக்கப்படுவார்கள்.

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் செயல்திறன் ஆய்வு : ஜனாதிபதி அலுவலகம் | Performance Review Ministries Ministry Secretaries

அதே நேரத்தில் 50 முதல் 65 வரை உள்ளவர்கள் இடமாற்றத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் 50 மதிப்பெண்களுக்கு கீழ் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அமைச்சின் செயலாளர் பதவியையும் இழக்க நேரிடலாம்.

புள்ளி முறைமை

ஒப்பந்த அடிப்படையில் இருப்பவர்கள் அவர்களது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம்.

இதேவேளை அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் பணியாற்றுவதற்கு அதிகாரிகளை தெரிவு செய்யும் போது புள்ளி முறைமை கவனத்தில் கொள்ளப்படும்.

அத்துடன் அதிகாரிகள் மீதான தொடர் நடவடிக்கைகளுக்காக காலாண்டு அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.