அடேங்கப்பா… மிரள வைக்கும் சுந்தர் பிச்சையின் புது வீடு!

0
213

இணையதளத்தில் வெளிவந்த தகவல்களின்படி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சாண்டா கிளாஸ் என்ற பகுதியில் தான் சுந்தர் பிச்சையின் வீடு அமைந்திருக்கிறது.

லொஸ் ஆல்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அவரது வீடு சாண்டா கிளாரா பகுதியின் மலை உச்சியில் 31.17 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த வீடு சுற்றுலாத்தலமா என்று கேட்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

இந்திய மதிப்பு 1800 கோடி ரூபா

இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பா, சோலார் பேனல்கள், லிப்ட் மற்றும் வேலையாட்களின் குடியிருப்புகள் என மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.

இதன் இந்திய மதிப்பு 1800 கோடி ரூபாயாகும். இது கூகுளில் பணியாற்றும் சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட இன்னொரு மடங்கு அதிகமாம். அதேசமயம் 2018 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சையின் பாதுகாப்பிற்காக மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பில் 9.8 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

அடேங்கப்பா.... மிரள வைக்கும் சுந்தர் பிச்சையின் புதிய வீடு! | The New Home Of The Awesome Sundar Pichai

2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழரான சுந்தர் பிச்சை மென்பொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவி உயர்ந்தார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் கணக்குப்படி சுந்தர் பிச்சை மொத்த ஊதியமாக 226 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.