அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

0
336

அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய 3 தமிழர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 3 பேருக்கும் அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிவிப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

டல்லாஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் விசி 3 பேருக்கும் இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

அமெரிக்க விருதை பெற்ற 3 தமிழர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.