யாழில் புகழ்பெற்ற கோவிலில் விஷமிகள் வில்லத்தனம்! பிள்ளையாரின் கால் உடைப்பு

0
206

யாழ் பருத்தித்துறை – கொட்டடி பிள்ளையார் கோவிலின் முன்னால் உண்டியலுடன் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலை அடித்து சேதமாக்கப்பட்டுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலையே சில விசமிகளால் உடைத்து எடுத்துச் செல்வதற்கான முயற்சி இடம்பெற்றிருக்கிறது.

யாழ் பிரபல ஆலயத்தில் விசமிகள் வில்லத்தனம்! பிள்ளையாரின் கால் உடைப்பு | Vishamis Are Villainous Famous Temple Of Jaffna

பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைப்பு

பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது. இந்நிலையில் சம்பவதினமான நேற்றுமுன்தினம் காலை அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்டபோது பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இந்த சிலையும் அமைக்கப்பட்டிருக்கும் பீடமும் கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக சிலையை அப்புறப்படுத்தும் முயற்சி கைகூடவில்லை என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.