இரு மணி நேரத்திற்குள் நடப்பதை மறக்கும் மாணவி!

0
191

இளம்பெண் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக தினமும் வாழ்வில் நடக்கும் செயல்களை 2 மணிநேரத்திற்குள் மறந்துவிடும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ரிலே ஹார்னர் என்ற 16.வயதுடைய கல்லூரியில் கல்வி பயின்று வரும் இளம் மாணவிக்கே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்மாணவி நடனம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் தனது சமநிலையை இழந்த ஒரு நபர் இந்த மாணவி மீது தவறுதலாக விழுந்ததால் இவர் மயக்கம் அடைந்துள்ளார்.

பின் ரிலேயின் தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வேளையில் 30 தொடக்கம் 40 வரையான எண்ணிக்கையில் அந்த மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

மறுநாள் காலையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் நினைவில் இல்லாமல் அனைத்தையும் மறந்துள்ளார்.

அன்றைய நாள் ஜூன் 11 ஆம் திகதியில் இவர் நடனம் ஆட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதே போலவே விடியும் ஒவ்வொரு நாளையும் இரண்டு மணி நேரத்திற்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றார்.

ஆகவே தனக்கு விபத்தில் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று நினைவுப்படுத்திக் கொள்வார். ஆனால் மீண்டும் இரண்டு மணிநேரத்திற்குள் அதை மறந்து ஜூன் 11ம் திகதிக்கே வந்துவிடுவாராம்.

வைத்தியர்கள் கூறும் முடிவு என்ன?

அந்த மாணவிக்கு விசித்திரமான மூளை நோய் ஏற்பட்டுள்ளது. ஆகவே மூளையதிர்ச்சி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது டிபிஐ (TBI) இன்னும் முழுமையாக மாற்றப்படாத காரணத்தால் அவரது நினைவுகள் தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.