தொட்டாலே மரணத்தை பரிசளிக்கும் பறவையினம்! வெளியான தகவல்

0
430

டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்து உள்ளனர்.

நியூ கினியா நாட்டின் வன பகுதியில் இந்த வகை பறவையினங்கள் காணப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்

குறித்த பறவைகள் தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில்,“இந்த வகை பறவைகள் அமெரிக்க காடுகளில் உள்ள விஷ தவளை இனங்களை போன்று மனிதர்களை கொல்ல கூடிய விஷ தன்மை கொண்டவையாக உள்ளன.

அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது.

அந்த இரண்டு இன பறவைகளும் பரிணாம வளர்ச்சியின் உதவியால் கொடிய, ஆபத்து நிறைந்தவையாக உருமாறி உள்ளது.

மனிதர்கள் தொட்டாலே மரணத்தை பரிசளிக்கும் பறவையினம்! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் | Touched You Bad Strange Birds Life Scientists

இந்த பறவைகள் விஷம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் திறனை வளர்த்து கொண்டுள்ளன. இதனால் இந்த பறவைகளே விஷம் நிறைந்த ஒன்றாக மாறி விடுகின்றன.”என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பு

இந்த பறவைகள்,சக்தி வாய்ந்த விஷ பொருட்களை சகித்துக்கொள்ள கூடியவையாக மாறுவது மட்டுமின்றி, அவற்றை தங்களது இறக்கைகளின் அடியில் சேர்த்து வைக்கிறது என டென்மார்க் நாட்டின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான நட் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அதனால், அவை தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படும் பச்சிசிபலா ஸ்கிளெகெலி என்ற பறவை குடும்ப வகையை சேர்ந்தவையாகவும் உள்ளன. மற்றொரு பறவையினம் ஆலியாடிரையாஸ் ருபினுச்சா பறவையினங்களில் ஒன்றாக உள்ளது.

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை இனங்களில் காணப்படும் விஷம் போன்ற இரசாயனங்களை இந்த பறவைகள் சுமந்து திரிகின்றன.

இந்த தவளைகளை லேசாக தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். அவ்வளவு விஷ தன்மை கொண்டவை. அதனையொத்த விஷத்தன்மையுடன் இந்த பறவைகளும் உள்ளன.”என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் விஷம் பரவல்

இந்த பறவையினங்களில் கண்டறியப்பட்ட விஷம், உலகம் முழுவதும் இந்த பரவி உள்ளது என அடையாளம் காட்டி உள்ளது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள் தொட்டாலே மரணத்தை பரிசளிக்கும் பறவையினம்! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் | Touched You Bad Strange Birds Life Scientists

தங்க நிற விஷ தவளை இனங்களில் காணப்படும் பத்ராசோடாக்சின் என்ற ஒரு வகை ஆற்றல் வாய்ந்த இரசாயன பொருள், அதிக செறிவுடன் உள்ளபோது, அவை தசைகளை செயலிழக்க செய்வதுடன், தொடர்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மாரடைப்பு ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாகவும் உள்ளன.

இந்த பறவையின் விஷமும் தவளைகளில் காணப்படுவது போன்று இதே வகையை சேர்ந்தவை.

அவை தசை திசுக்களுக்குள் சோடியம் என்ற இரசாயன பொருளை ஊடுருவி செல்ல செய்து, தொடர்ந்து அது திறந்திருக்கும்படி செய்து, இறுதியில் மரணம் ஏற்படுத்தும் என ஆய்வாளர் கசுன் பொடாவட்டா தெரிவித்துள்ளார்.