நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
309

பதுளை மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நிலச்சரிவு எச்சரிக்கை

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்தால், பதுளை பிரதேச செயலகப் பிரிவின் (டி.எஸ்.டி.) ஹல்துமுல்ல பிரதேசம் மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவின் எலபாத்த ஆகிய பகுதிகளிலுள்ள (டி.எஸ்.டி) மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நிலச்சரிவுகள், பாறைகள் இடிந்து விழுதல் போன்றவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களே அவதானம்! நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | Landslide Warning Badulla Ratnapura

மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் 

மற்றும் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற தயாராக இருக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கனமழை தொடர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.