எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
300

மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி குறைந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | The Minister Of Energy Regarding Electricity

இந்நிலையில் இலங்கை மின்சார சபையிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இதனை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மக்கள் மின் நுகர்வினை வரையறுத்துக் கொண்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.