வாகன பேரணியில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்! பாடசாலை நிர்வாகத்தின் தகவல்

0
178

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த வாகன பேரணியை பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்யப்படவில்லை என பதுளை தர்மதூத உயர்தர பாடசாலை அதிபர் எச்.எம்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விளையாட்டு போட்டியின் போது விபத்திற்குள்ளான வாகன அணிவகுப்பு பேரணியை தமது பாடசாலை ஏற்பாடு செய்யவில்லை என பதுளை தர்மதூத உயர்தர பாடசாலை அதிபர் எச்.எம்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

பாடசாலை நிர்வாகம் வெளியிட்ட தகவல்

இதன்போது பேரணியை நிறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவித்த போதும் சில குழுக்கள் அதனை மீறி நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த போட்டியின் போது பிரதான வீதியில் வாகன பேரணிக்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில்,குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் வாகன பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

வாகன பேரணியில் சிக்கி மாணவர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம்! பாடசாலை நிர்வாகம் வெளியிட்ட தகவல் | Badulla Accident Today School Students Died

இதன்போது விபத்திற்குள்ளான வாகனத்தை பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்தியதாகவும், விளையாட்டு  பயிற்றுவிப்பாளர் வாகனத்தை செலுத்த வேண்டாமென மாணவரை பல முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், பதுளை தர்மதூத வித்தியாலயத்தின் இந்த போக்குவரத்து பேரணி பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும், முறைசாரா அமைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், பதுளை தர்மதூத பாடசாலைக்கும்  ஊவா பாடசாலைக்கும் இடையிலான வருடாந்த கிரிக்கட் போட்டியின் ஏற்பாட்டாளர் சபை வாகன அணிவகுப்பை நடத்தாததன் பின்னணியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.