கொழும்பில் காதல் விவகாரத்தால் ஒருவர் கொடூரமான முறையில் கொலை!

0
244

கொழும்பு பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் களுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு காதல் விவகாரமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் காதல் விவகாரத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்! | Man Was Killed By A Love Affair In Colombo Kosgama