டால்பின்களை துன்புறுத்தியதாக 33 நீச்சல் வீரர்கள் மீது குற்றச்சாட்டு!

0
330

அமெரிக்காவில் கடலில் டால்பின்களை துன்புறுத்தியதாக நீச்சல் வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டால்பின்களுடன் நீந்துவது ஹவாய் மாகாணத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாகும்.

ஆனால் டால்பின்கள் இருக்கும் இடத்தில் இருந்து 45 மீட்டர்களுக்கு உள்ளாக நீந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹொனாவ் வளைகுடாவில் அதிகாரிகள் ரோந்து சென்ற போது 33 நீச்சல் வீரர்கள் டால்பின்களை துன்புறுத்துவதைக் கண்டனர். இதன்போது நீச்சல் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஹவாய் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.