முன்னாள் கணவனை பழிவாங்க மகள்களை கொன்ற பெண்!

0
285

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரை பழி வாங்க அவர்களது மகள்களை தேடிச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெரோனிகா யங்ப்ளட் (வயது 37) என்ற பெண் தனது முன்னாள் கணவரை பலி வாங்குவதற்காக தனது மகள்களை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. வெரோனிகா தனது மகள்களான சரோன் (வயது 15), யங்ப்ளட் (வயது 5) ஆகியோரை கொலை செய்தார்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் குற்றமற்றவர் என்று கடந்த ஓகஸ்ட் 15 இல் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அவர் மீது இரண்டு முதல் நிலை கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற சட்டத்தரணியின் வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாலியல் தொழிலாளி

வெரோனிகா இரண்டு முறை துப்பாக்கிச் சூடு செய்ததற்காகவும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வார விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

யங்ப்ளட்டினின் சகோதரி, முன்னாள் கணவர் மற்றும் முன்னாள் காதலர் ஆகியோரும் சாட்சியமளித்ததாக தெரிவித்துள்ளது. அதேவேளை யங்ப்ளட் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது.

அவர் தனது சொந்த குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். மெக்லீன், வர்ஜீனியா அபார்ட்மெண்டில் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதற்காக அவர் தனது குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

முன்னாள் கணவரை பழி வாங்க மகள்களை கொலை செய்த பெண்! | Killed Her Daughters To Take Revenge Ex Husband

தனது மகள் புரூக்ளின் தலையில் அவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இரண்டாவது மகளான ஷரோன் இரு முறை சுடப்பட்டுள்ளார். உடனே ஷரோன் உயிருக்குப் போராடிய நிலையில் அவசர எண்ணான 911 ஐ அழைத்து, அவரது தாயார் அவளை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.

விரைந்து வந்த பொலிஸார் ஷரோனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.