திடீர் நிலநடுக்கம்: உயிர் தப்பிய லியோ படக்குழு!

0
248

இயக்குநர் லோகேஷ் கனராஜ் மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விஜயை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகின்றனர்.

மேலும் லியோ படத்தில் தளபதி விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்க இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர் தப்பிய லியோ படக்குழுவினர்! | Earthquake In Kashmir Vijay Leo Film Crew Escaped

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உட்பட லியோ படக்குழுவினர் அனைவரும் காஷ்மிருக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் காஷ்மிரில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து லியோ படக்குழுவினர் தப்பியுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர் தப்பிய லியோ படக்குழுவினர்! | Earthquake In Kashmir Vijay Leo Film Crew Escaped

இதேவேளை, காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் கதிர், நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்ட ‘லியோ’ படக்குழுவினர் நில அதிர்வை உணர்ந்து பீதி அடைந்தனர். உடனே ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து, படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் ‘காஷ்மீரில் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டது.