கையில் சரக்கு பாட்டிலோடு குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்

0
320

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தசரா. இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தசரா

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.

தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாளன்று நடிகை கீர்த்தி சுரேஷ் படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயங்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புரமோஷன்

அதில் இருவரும் கலந்துகொண்டனர். நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்தப் பட ட்ரைலரில், நானி சரக்கு பாட்டிலை வாயில் வைத்து ஒரே கல்பாக அடிக்கும் படியான காட்சி இடம்பெற்று இருக்கும். அதைப்போலவே செய்துக் காட்டினார்.

நானியுடன் கையில் சரக்கு பாட்டிலோடு குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் | Dasara Keerthi Suresh In Mumbai

அப்போது அங்கு பாட்டில் உடன் வந்த கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அந்த பாட்டிலில் உள்ளதைக் குடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். அதன்பின்பு தான் அதில் இருந்தது குளிர்பானம் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.