நாளை ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிப்பதற்கான மாநாடு

0
262

ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நாளை இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.