உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 112வது இடம்!

0
294

2023 ஆண்டின் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் பட்டியிலில் இலங்கை 112 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தரப்பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஆறாவது முறையாக முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இலங்கையின் நிலை 2022 ஆம் ஆண்டு 127வது இடத்தில் இருந்ததை விட மேம்பட்டுள்ளது.

மகிழ்ச்சி தரப்பட்டியலில் டென்மார்க் இரண்டாவது இடத்திலும் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும் இஸ்ரேல் நான்காவது இடத்திலும் உள்ளன.

உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்! | Sri Lanka Got A Place List Happiest People World

இந்த தரவரிசையில் அண்டை நாடான இந்தியா 126வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள மகிழ்ச்சியான இடங்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் 6 முக்கிய காரணிகளை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை என்பனவே அவையாகும்.

உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்! | Sri Lanka Got A Place List Happiest People World