யாழ் காரைநகரில் திருட்டு கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்..

0
321

யாழ்ப்பாணம் – காரைநகர் கோவளம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பலை மக்கள் மடக்கிப்  பிடித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்றையே மக்கள் மடக்கிப் பிடித்து நையப் புடைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

காரைநகர் கோவள பகுதியில் வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ் காரைநகரில் திருட்டு கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்! | Public Caught The Robbery Gang In Karainagar

இதேவேளை, காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்றையதினம் (17-03-2023) கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ் காரைநகரில் திருட்டு கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்! | Public Caught The Robbery Gang In Karainagar

மக்களால் நையப்புடைக்கப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.