இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து வெளியான தகவல்!

0
224

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் மாதத்தின் முதல் இருவாரங்களுக்குள் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இம்மாதம் (மார்ச்) முதல் 13 நாட்களில் 53,838 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர்களில் 12,762 பேர் ரஷ்யப் பிரஜைகள் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்

அதற்கு மேலதிகமாக 7,348 இந்தியர்கள், 4,289 ஜேர்மனியர்கள் மற்றும் 3,937 பிரித்தானியப் பிரஜைகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான இரண்டரை மாதகாலத்துக்குள் மட்டும் 264,022 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.