பௌத்த மயமாக்கலால் கைவிட்டுப்போகும் தமிழர் பகுதியின் மிகப்பிரசித்தி பெற்ற வராலாற்றிடம்!

0
270

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மயமாக்கல்

பௌத்த மயமாக்கலால் கைவிட்டுப்போகும் தமிழர் பகுதியின் மிகப்பிரசித்தி பெற்ற வராலாற்றிடம்! | Brought Under The Archeology Department

இந்த நிலையில் கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு 2011 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருகோணமலை பட்டிணமும் சூழல் பிரதேச சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் என்பன கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தன.

பௌத்த மயமாக்கலால் கைவிட்டுப்போகும் தமிழர் பகுதியின் மிகப்பிரசித்தி பெற்ற வராலாற்றிடம்! | Brought Under The Archeology Department

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு கன்னியா வெந்நீர் ஊற்றின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை, திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம், திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.