குடும்பஸ்தரை துரத்தி வந்த வாள்வெட்டு குழு; திருப்பி தாக்கியதால் தலைதெறிக்க ஓட்டம்!

0
229

கிளிநொச்சி – தருமபுரம் பகுதில் 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலின் தாக்குதலில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தப்பியுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

இந்த சம்பவம் தொடர்பிஒல் மேலும் தெரியவருகையில், 

நேற்றுமுன்தினம் இரவு கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்த்தரை வழிமறித்த 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

திருப்பித்தாக்கிய குடும்பஸ்தர்

இதன்போது குடும்பஸ்த்தர் தனது கையிலிருந்த தலைக்கவசத்தால் திருப்பித் தாக்கியதனால் நிலைகுலைந்த தாக்குதல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது,

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார்   விசாரணைகளை நடத்தினர்.

இதன்போது வாள்வெட்டு கும்பலால் கைவிடப்பட்ட 2 வாள்களை பொலிஸார் மீட்டதுடன் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளின் அடிப்படையில்  சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.