சீனா காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு வழங்க திட்டமிடலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
போரில் அமைதி திரும்ப வேண்டும் என சீனா தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் போர் நிறுத்த முன்மொழிவுகளை சந்தேகத்துடன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் சீனாவை எச்சரித்துள்ளன.
ஆனால் சமீபத்திய அறிக்கைகளின்படி பெய்ஜிங்கும் மாஸ்கோவும் 100 ஸ்ட்ரைக் ட்ரோன்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவை ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.