கடவுளே, ஒரு குழந்தையையாவது உயிருடன் விட்டு வை..! ஆறு பிள்ளைகளை மொத்தமாக பறிகொடுத்த தந்தையின் கண்ணீர்..

0
226

சிரியாவில் திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறு பிள்ளைகளை மொத்தமாக பறிகொடுத்த தந்தை ஒருவர், கடவுளிடம் ஒரேயொரு பிள்ளையை விட்டுவை என கெஞ்சியதாக கதறியுள்ளார்.

மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்

கடந்த திங்களன்று துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கத்தால், இதுவரை 23,000 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாடுகளிலும் சுமார் 83,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கடவுளே, ஒரு குழந்தையையாவது உயிருடன் விட்டுவை: நிலநடுக்கத்தில் 6 பிள்ளைகளை இழந்த தந்தையின் கண்ணீர் | Let One Survive Syrian Man Mourns Lost Children

இந்த நிலையில் சிரியாவில் தந்தை ஒருவரின் கண்ணீர் கதை பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. சிரியாவின் ஜந்தாரிஸ் பகுதியை சேர்ந்த Naser al-Wakaa என்பவர் நிலநடுக்கத்தை அடுத்து, கடவுளிடம் தமக்கு ஒரே ஒரு பிள்ளையை விட்டுவை என கெஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.

திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, இவரது மூன்று பிள்ளைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளை அவர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமது 9 பிள்ளைகளில் மூவர் மட்டுமே உயிர் தப்பியதாகவும், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானதாக அவர் கண்ணீர் விட்டுள்ளார்.

கடவுளே, ஒரு குழந்தையையாவது உயிருடன் விட்டுவை: நிலநடுக்கத்தில் 6 பிள்ளைகளை இழந்த தந்தையின் கண்ணீர் | Let One Survive Syrian Man Mourns Lost Children

கடவுளே ஒரே ஒரு பிள்ளையை மட்டும்

நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த நொடி தாம் எப்படி உணர்ந்தேன் என்பதை பதிவு செய்துள்ள அவர், வான் தாக்குதல், வெடிகுண்டு வீச்சு என பல கட்டங்களை வாழ்க்கையில் எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர்,

கடவுளே, ஒரு குழந்தையையாவது உயிருடன் விட்டுவை: நிலநடுக்கத்தில் 6 பிள்ளைகளை இழந்த தந்தையின் கண்ணீர் | Let One Survive Syrian Man Mourns Lost Children

ஆனால் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த நொடி, வீட்டைவிட்டு வெளியேறிய தாம், கடவுளே ஒரே ஒரு பிள்ளையை மட்டும் எனக்கு துணையாக விட்டுவை என உருக்கமாக கெஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவை உருக்குலைத்த நிலநடுக்கத்தில் இதுவரை 23,000 மக்கள் கொலப்பட்டுள்ளனர். துருக்கி எல்லையில் அமைந்துள்ள ஜந்தாரிஸ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் மற்றும் காயத்திலிருந்து தப்பிய சாதாரண மக்கள் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியோர்களை மீட்க பல நாட்களாக போராடி வருகின்றனர். தற்போது, பலியான மக்களை கூட்டாக புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.