சிவனுக்கு ஏன் வில்வ இலை வைத்து வணங்குகிறோம் தெரியுமா?

0
361

பொதுவாக சிவ வழிபாட்டில் ஈடுபடுவர்கள் வில்வம் இலை அதிகம் தேடுவார்கள். இதற்கு என்ன காரணம் என்று சிலருக்கு தெரியாமலே வழிபாட்டுக்கு பயன்படுத்துவார்கள்.

மேலும் வில்வ இலை இல்லாமல் சிவனுக்கான அர்ப்பணிப்பு முழுமை அடையாது எனவும் ஐதிகம் ஒன்று இருக்கிறது. வில்வம் இலையிலுள்ள வடிவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளை தருகிறது.

இதன்படி, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை, சாத்வீகம், ரஜோ குணம் மற்றும் தாமசம் எனும் மூன்று குணங்களையும் கொண்டுள்ளது.

தொடர்ந்து பிரணவ மந்திரத்தின் ஒலிகளான “அ” “உ” “ம்” போன்ற பல அம்சங்களின் இதன் குறியீடாக கருதுகிறார்கள். மூன்று வில்வம் இலைகளின் வடிவமானது சிவபெருமானின் மூன்று கண்கள் அல்லது திரிசூலத்தை குறிப்பதாக பார்க்கப்படுகிறது.

இது போன்ற பல புராண குறிப்புகளும் விளக்கங்களும் இருந்தாலும், ஏன் வில்வம் இலை சிவனுக்கு ஏன் பிடிக்கும் என்பதை பற்றி சத்குரு அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்.

சிவனுக்கு ஏன் வில்வம் இலைகளை படைக்கிறோம்?

சிவனுக்கு ஏன் வில்வ இலை வைத்து வணங்குகிறோம்? | Vilvam Leaf

” பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கும் போது சிவன் அந்த இலைகளை எடுத்துக் கொள்வதில்லை. நாம் தான் அதனை எடுத்துக் கொள்ளப் போகிறோம். இந்த இலைகளுக்கு ஆற்றலை உள்வாங்கும் உயர்ந்த திறன் என்ற ஒன்று இருக்கிறது.

அதாவது, இது வில்வம் இலைகளை லிங்கத்தின் மீது வைத்து எடுத்த பிறகு, குறித்த இலைகள் சிவனின் லிங்கத்தில் இருந்து வரும் அதிர்வை தன்வசப்படுத்திக் கொள்ளும்.

சிவலிங்கத்திலிருந்து எடுத்த இலைகளை நமது நெஞ்சோரத்தில் வைத்துக் கொள்ளும் போது, ஆரோக்கியம், நல்வாழ்வு, மனநிலை ஆகிய மூன்றிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறது. இது போல் பல விடயங்கள் தெய்வங்கள் குறித்து இருக்கிறது. இது கடவுள் பற்றிய கணிப்பு அல்ல உங்களை பற்றியது.” எனக் கூறியுள்ளார்.

மேலும், மகாராத்திரி அன்று ஆதியோகியில் ருத்ராட்ச பிரதிஷ்டை செய்யும் போது சத்குரு வில்வ இலைகளை பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்யும் போது வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் ஆதியோகியின் திருவுருவ தரிசனம் சென்றடையும் என அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.