அதிபர் புடினை கோவப்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்!

0
383

அதிபர் புட்டினை கோவப்படுத்தும் வகையில் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லந்து ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு Leopard 1 ரகக் கவச வாகனங்களை அனுப்பவிருக்கின்றன.

இந்த நடவடிக்கையால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கடும் கோபமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இருப்பில் உள்ள சுமார் 100 வாகனங்களைச் சோதித்துச் சீரமைத்து அவற்றை உக்ரேனுக்கு அனுப்பத் தேவையான நிதியொதுக்க அந்த மூன்று நாடுகளும் இணங்கியுள்ளன.

அதிபர் புட்டினை கோவப்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்! | President Putin Angry European Countries

ஜெர்மனி தற்காப்பு அமைச்சர் Boris Pistorius முன்னறிவிப்பின்றி கீவ் சென்று பார்வையிட்டார். கோடைக்காலத்தில் 20 இலிருந்து 25 கவச வாகனங்கள் உக்ரேனைச் சென்று சேரும்.

மேலும் 80 கவச வாகனங்கள் இந்த ஆண்டு இறுதியிலும் கூடுதலாக 100 கவச வாகனங்கள் அடுத்த ஆண்டும் கீவுக்கு அனுப்பப்படும்.

இதன் போது ஜெர்மானியத் தற்காப்பு அமைச்சருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு உக்ரேனியத் தற்காப்பு அமைச்சர் Oleksiy Reznikov அலுவலகம் அந்த அறிவிப்பை வெளியிட்டது.