வீடுகளுக்கு கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப் பொருள் வியாபாரமும் செய்து வந்த தபால் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சந்தேகநபரிடம் இருந்து 5150 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரான தபால் ஊழியர் போதைப்பொருள் விநியோகிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஏன் இந்தத் தொழிலை மேற்கொண்டீர்கள் என சந்தேகநபரிடம் வினவியபோது தனக்கு கிடைக்கும் சம்பளம் வாழ போதுமானதாக இல்லை வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.