பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை திடீரென சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட விக்ரமனின் ரசிகர்கள் இதனை சமூக வலைதளத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த ஒக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.
இதேவேளை, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரை அதிகபட்சமாக 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மிகவும் விறு விறுப்பாக, எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில், வெற்றி பெறுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான்.
இதற்க்கு முக்கிய காரணம், முதல் நாளில் இருந்தே மிகவும் பொறுமையாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்ததோடு, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் நிதானத்துடன் கையாண்டார். இதனை பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனே பாராட்டியுள்ளார்.

குறிப்பாக அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என கூறும் பலர் விக்ரமன் போன்ற சிறந்த இளைஞர்கள் அரசியல் களத்தில் இருப்பது மிகவும் பெருமை பட வேண்டிய விடயம் என்றும் கூறி வந்தனர்.
அதேவேளை, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன் வெற்றி பெறாமல், அசீம் வெற்றி பெற்றது பலரது எதிர்பார்ப்பை பொய்யாக்கினாலும், அவரும் ஒரு சிறந்த போட்டியாளர் தான் என பிக்பாஸ் ரசிகர்கள் மனதை தேற்றி கொண்டனர்.
அதே போல் நடிகர் கமல்ஹாசன் விக்ரமனின் தோலை தட்டி அறம் வெல்லும் என கூறியது, அனைவரையுமே ஆச்சரியப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து சில நாட்கள் ஆகும் நிலையில், திடீரென நடிகர் கமலஹாசனை விக்ரமன் அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
“மதிப்புக்குரிய அண்ணன் திரு கமல்ஹாசன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் விக்ரமனை புகழ்ந்து வருவதோடு இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் விக்ரமனின் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.