கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான நாய்!

0
281

உலகிலேயே மிகவும் வயதான நாய் என்ற சாதனையை படைத்து போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி (bobi) என்ற நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாய் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ரபியிரோரியோ டோ அல்ஜென்டிஜோ என்ற இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14 வயது வரை மட்டுமே வாழ்பவை. எனினும், இதே இனத்தைச் சேர்ந்த இந்த போபி 30 ஆண்டுகளைக் கடந்து 226 நாட்கள் வாழ்ந்துள்ளது.

கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்த நாய்! | Bobi Dog In Guinness Book Of Records 30 Years Live

இந்த நாயை தற்போது வளர்த்து வரும் நபர், அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதையே போபிக்கும் உணவாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 1939ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு நாய் 29 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற நிலையில், தற்போது போபி அந்த நாயின் சாதனையை முறியடித்துள்ளது.