பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மரணத்தில் மர்மம்!

0
424

இந்திய திரையுலக புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மரணம் இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸார் பாடகி வாணி ஜெயராமின் மரணத்தை இவ்வாறு வகைப்படுத்தியுள்ளனர்.

78 வயது வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று உயிரிழந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பொலிஸார் சந்தேகம்

தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் தலையில் காயம் இருந்தது. வீட்டில் கீழே விழுந்தபோது மேசையில் மோதி காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறினர்.

தடயவியல் நிபுணர்கள் வாணி ஜெயராமின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

அதேவேளை சுமார் 50 ஆண்டுகளாக திரையிசை உலகில் முத்திரை பதித்தவர் வாணி ஜெயராம்.

தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம் .

மேலும் இந்திய அரசாங்கம் அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவித்தது. இந்நிலையில் அவரது மரணம் இந்திய திரையுலககாய் பெரும் சோகத்திபோல் ஆழ்த்தியுள்ளது