நட்சத்திர ஹொட்டலுக்கெல்லாம் நாம் போகமுடியுமா என எண்ணியிருக்கிறோம்… மனம் திறந்த ரிஷி சுனக்

0
259

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் காதல் வாழ்வு குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்த ஹொட்டலுக்கெல்லாம் நாம் போகமுடியுமா என எண்ணியிருக்கிறோம்

ரிஷியும் அவரது இந்நாள் மனைவியும் அந்நாள் காதலியுமான அக்‌ஷதாவும், தாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது, காதலிக்கும் நாட்களில், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ஒரு நட்சத்திர ஹொட்டல் அமைந்துள்ள பகுதி வழியாக நடந்து செல்வார்களாம்.

Ritz-Carlton retreat என்னும் அந்த ஐந்து நட்சத்திர ஹொட்டலைப் பார்க்கும்போதெல்லாம், இந்த ஹொட்டலிலெல்லாம் நம்மால் தங்கமுடியுமா என அவர்கள் எண்ணியதாக தெரிவித்துள்ளார் ரிஷி.

நட்சத்திர ஹொட்டலுக்கெல்லாம் நாம் போகமுடியுமா என எண்ணியிருக்கிறோம்... காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரிஷி சுனக் | Rishi Sunak Opens Up About His Love Life

மனைவிக்கு ரிஷி கொடுத்த சர்ப்ரைஸ்

ஆனால், பின்னாட்களில், சர்ப்ரைஸாக அதே Ritz-Carlton retreat ஹொட்டலுக்கு அக்‌ஷதாவை அழைத்துச் சென்று தங்கவைத்த ரிஷி, அங்குவைத்துதான் தன் காதலை அக்‌ஷதாவிடம் வெளிப்படுத்தினாராம்.

நட்சத்திர ஹொட்டலுக்கெல்லாம் நாம் போகமுடியுமா என எண்ணியிருக்கிறோம்... காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரிஷி சுனக் | Rishi Sunak Opens Up About His Love Life

அத்துடன், அதே ஹொட்டலில் அமைந்துள்ள Half Moon Bay என்னும் இடத்தில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.

இன்று கடினமான ஒரு பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். என் மனைவியும் அன்பும் ஆதரவும் இல்லையென்றால் என்னால் இந்தப் பணியை இந்த அளவுக்கு செய்திருக்கமுடியாது என காதலும் நெகிழ்ச்சியுமாகக் கூறுகிறார் ரிஷி.