அதிக சாத்தான் வழிபாட்டாளர்களை கொண்ட பிரித்தானிய நகரம்

0
262

பிரித்தானியாவில் ஆரவாரமேதுமற்ற இந்த நகரத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான சாத்தான் வழிபாட்டாளர்கள் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தானை வழிபடும் மக்கள்

சஃபோல்க் மாவட்டத்தின் பங்கே நகரில் தான் சுமார் 70 சாத்தான் வழிபாட்டாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது தேசிய சராசரியைவிடவும் 100 மடங்கு அதிகம் என்றே கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 8,500 மக்கள் தொகையில் 1% பேர்கள், 2021ல் தாங்கள் சாத்தானை விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இதனாலையே, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சாத்தான் வழிபாட்டாளர்களின் தலைநகரமாக பங்கே அறியப்படுகிறது.

மட்டுமின்றி, மிக முக்கியமாக, உலக நாடுகளில் விற்பனையில் சாதனை படைத்துள்ள, பிரித்தானியாவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூலும், ஜேகே ரௌலிங்கின் ஹரி பாட்டர் தொடரும் இங்கே தான் அச்சிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சாத்தான் வழிபாட்டாளர்கள் அதிகம் கொண்ட நகரம்: ஹரியின் விவாத நூல் அச்சிடப்பட்டதும் இங்கு தான் | Sleepy Town Most Satanists In The Uk

சிறந்த பாலாடைக்கட்டி

அத்துடன், இங்கு தயாரிக்கப்படும் பிரபலமான பாலாடைக்கட்டி ஒன்று, பிரித்தானியாவிலேயே சிறந்தது என்ற விருதும் கைப்பற்றியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முடங்கிப்போன மக்கள் தங்களை சாத்தான் வழிபாட்டாளர்கள் என வேறு வேலையின்றி பதிவு செய்திருக்கலாம் என நகர மேயர் டோனி டேவ்ஸ் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.